Perambalur: A car in front slammed on its brakes after a dog crossed its path, causing the car behind it to collide with a Maruti car and catch fire. 6 people injured!

பெரம்பலூர் அருகே மங்கலமேடு பகுதியில் இன்று காலை சுமார் 7 மணி அளவில், நாய் குறுக்கே வந்ததால் முன்னே சென்ற கார், தீடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், தீப்பிடித்து எரிந்தது. இதில், காரில் வந்த 6 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை ஆவடி அருகே உள்ள கவுரிப்பேட்டை, ஈஸ்வரன் கோயில் செயின்ட் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (46), குடும்படத்தினருடன் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் ஸ்ரீதர் மனைவி சிவராணி (40), உடன் சென்றுக் கொண்டிருந்தார். காரை ஆவடி அருகே உள்ள வசந்தம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செந்தில்குமார் (48), ஓட்டிச் சென்றார்.

கார் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு மின்வாரிய ஆபிஸ் அருகே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் டிரைவர் சுப்ரமணியன் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் சென்னையில் இருந்து திண்டுக்கல்லை நோக்கி வந்த கார் பின்னால் பலத்த சத்தத்துடன் மோதி, சாலையை விட்டு விலகி சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

அப்போது, காரை ஓட்டி வந்த திண்டுக்கல் புதுப்பட்டி அருகே உள்ள கனப்பாடி கிராமத்தை நல்லையா (30), தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்தார். அவருடன் பயணித்த இவரது மனைவி சத்தியா (25), மதுமித்ரன் (1), மற்றும் உறவினர்களான நாகராஜ் மனைவி சரஸ்வதி (35) இவரின் குழந்தைகள் இலக்கியா (16) சபரிநாதன் (12) முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு ஆறு பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர் சிகிச்சைக்கா அனுமத்தித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்கலமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!