Perambalur: A consultative meeting of district PMK functionaries was held, presided over by District Secretary Senthilkumar.

பெரம்பலூர் மாவட்ட பாமக அலுவலகத்தில், அனைத்து கிளைகளிலும் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமனம், கொடியேற்றுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில், பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர், வெப்பந்தட்டை, செந்துறை ஒன்றிய செயலாளர்களும், பெரம்பலூர் நகரம் மற்றும் லப்பைக்குடிக்காடு, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூர் பொறுப்பாளர்களும், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிளை செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பாமக, வன்னியர் சங்க கொடி ஏற்றுவது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், ஒன்றிய செயலாளர்களிடம் கிளை பொறுப்பாளர் நியமனப் படிவம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அவர்கள் வரும் ஜுலை. 25க்குள் பூர்த்தி செய்து வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில், ஒன்றிய செயலாளர்கள் சீனி. சிவசங்கர், அய்யாசாமி, கதிரேசன், ஜெயபிரகாஷ், கரிகாலன், சிவசூரியன், சுதாகர், யுவராஜ், ரவிசங்கர், ரமேஷ், முத்துசாமி, திருமுருகன், செல்ல.ரவி, வேல் மணி, அரும்பாவூர் நகர செயலாளர் ராமசாமி, மற்றும் அ.மேட்டூர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497