Perambalur: A new scam involving a church priest; Police net the mysterious person!

Thanks & Photo Crdit to paytminsurance.co.in
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் புனித பிரான்சிஸ் அசிசியர் தேவலாயம் உள்ளது. அதில் பாதிரியராக இருப்பவர் வில்லியம்ஸ். அவர் பாடாலூர் போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளதாவது; கடந்த சில தினங்களாக அவரை தொடர்பு கொண்ட நபர் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள், சாக்லட், கேக்குகள் வழங்க உள்ளதாக தெரிவித்து கடந்த ஒரு வாரமாக தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இந்நிலையில் இன்றும் அவரை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் அவர் வந்த பைக் பழுதாகி விட்டதாகவும், பாதிரியரிடம் அவருடைய பைக்கை கொஞ்சம் ஓசி கேட்டநபர் பைக்குடன் சென்றவர் நீண்ட நாளாகியும் திரும்பாததால் இன்று பாடாலூர் போலீசில் புகார் அளித்ததாக தெரிவித்தன் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பாதிரியார் பைக்குடன் தப்பிய மோசடி மன்னனை தீவிரமாக அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497