Perambalur: A pack of dogs is rampaging in Velluvadi village, and a calf is fighting for its life after being bitten and mauled!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெள்ளுவாடி கிராமத்தில் உள்ள மேலவாடி பகுதியில் இன்று மாலை அந்த கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான வயலில் அவரது கன்றுக் குட்டி வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதிக்கு கூட்டமாக வந்த நாய்கள் ஒன்று திரண்டு வெறி கொண்டு மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை கடித்து குதறி சாப்பிடத் தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டியடித்து, கன்றுக்குட்டியை மீட்டனர், பின்னர், மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வருகின்றனர். இருப்பினும் கன்றுக்குட்டிக்கு குடல் வெளியே வந்ததுடன் உடலின் பல பகுதிகளில் சதைகள் நாய்கள் கடித்து தின்றதால், கிழிந்து தொங்குகிறது. நாய்கள் தொல்லை நாளுக்கு அதிகரித்த வண்ணமாக இருப்பதுடன் அந்த ஊரில் உள்ள கோழி இறைச்சி கடைகள் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் நடவடிக்கை வேண்டும் என்றும், இறைச்சி கழிவுகளை தின்று பழகிய நாய்கள் இன்று அமாவாசை என்பதால் வெறிபிடித்து ருசிக்க கன்றுக்குட்டியை பதம் பார்த்துள்ளன. இந்த நாய்களிடம் நொறுக்கு தீனிகளுடன் தெருவில் செல்லும் சிறு குழந்தைகள் சிக்கி இருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசு அதிகாரிகள் அலட்சிய போக்குகாட்டாமல், முதலமைச்சர் அறிவித்த தெருநாய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் வெள்ளுவாடி கிராமத்தில் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.