Perambalur: A senior AIADMK Party members praised and thanked the DMK minister for fulfilling the dream of generations by building a bridge!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில், நேற்று முன்தினம் பல்வேறு நலத்திட்டபணிகனை தொடங்கி வைத்தும், முடிவடைந்த பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கும் திறந்து வைத்தார். அப்போது, பிரதம மந்திரியின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.89 கோடி மதிப்பில், ஜெமீன் பேரையூர் – அருணகிரிமங்கலம் சாலையில் மருதையாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா ஜெமீன் பேரையூரில் நடந்தது. அதே ஊருக்கு மாக்காய்குளத்தில் இருந்து ரூ.85 லட்சம் மதிப்பில் சாலை பலப்படுத்தும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, அதிமுகவை சேர்ந்த மூத்த தொண்டர் செல்லப்பிள்ளை (78), நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு நேரில் வந்து, திமுகவை சேர்ந்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கரை பாராட்டியதோடு, பாலம் கட்டி கொடுத்தற்கு நன்றியும் தெரிவித்தார். பதிலுக்கு அமைச்சர் சிவசங்கர் பரஸ்பரத்துடன் அவருக்கு மரியாதை கைகுலுக்கி வணக்கம் தெரிவித்ததோடு, கையெடுத்து கும்பிட்டு அவருடன் போட்டோவும் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் சிறப்பு என நன்றி தெரிவித்தார்.
மாற்றுக்கட்சி சேர்ந்தவராக இருந்தாலும், தங்கள் ஊரின் தலைமுறை கனவை நிறைவேற்றித் தந்த திமுக அமைச்சரை தேடிவந்து வரவேற்று பாராட்டி நன்றி தெரிவித்த அதிமுக மூத்த தொண்டர் செல்லப்பிள்ளையையும், அவரது பாராட்டை ஏற்றுக் கொண்டு அவருக்கு பரஸ்பரமாக எளிமையாக சாமனியனியனாக உரையாடிய அமைச்சர் சிவசங்கரையும் அங்கிருந்தவர்கள் பாராட்டி சென்றனர்.