Perambalur: A young man drowned while bathing in the lake!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே ஏரிக்கு குளிப்பதற்காக சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம் மகன் விக்னேஸ்வரன் (31) விவசாயி. இவர் இந்த ஊரில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றவரை காணவில்லை, என கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி நீரில் மூழ்கி உயிரிழந்தவரை சடலமாக மீட்டு பாடாலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாடாலூர் போலீசார் விக்னேஸ்வரன் உடலை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.