பெரம்பலூர் அருகே உள்ளது கோனேரிப்பாளையம் ஊராட்சி. அந்த ஊரின் தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் அய்யாவு மற்றும் ஊராட்சி செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் 18 லட்சத்து 59 ஆயிரத்து 522 ரூபாய் முறையேடு செய்ததாக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆலயமணி பெரம்பலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசாரிடம் இன்று புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் கோனேரிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் (அதிமுக), ஊராட்சி செயலாளர் சிலம்பரசன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளது குறித்து தகவலறிந்து தப்பி ஓடி தலைமறைவான துணைத் தலைவர் அய்யாவுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொது மக்கள் வளர்ச்சி திட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.