Perambalur: AIADMK members, led by District Secretary R. Tamilselvan, have submitted a petition to the Police SP demanding action against DMK members!

பெரம்பலூர் அதிமுகவினர், மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர். தமிழ்ச்செல்வன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பஷேராவிடம் மனு ஒன்றை இன்று மாலை கொடுத்தனர்.

அதில், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் BNS Act 2023ன்கீழ் தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் T.R.B.ராஜா மற்றும் X-தளத்தில் அவதூறு செய்தியை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் தொடர்பாக கொடுத்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 17.06.2025 அன்று மாலை 5.57 மணியளவில் எக்ஸ் சமூக வலைதளத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் T.R.B.ராஜா நிர்வகித்து வரும் தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ தகவல் தொழில்நுட்ப பிரிவின் (@DMKITwing) என்ற பக்கத்தில் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளோடு அவரின் கண்ணியத்தையும் மற்றும் அவரின் மாண்பையும் பதவியையும் கீழ்தரமாக சித்தரிக்கும் வகையில் அருவருக்கத்தக்க மற்றும் ஆபாசமான அரைநிர்வாண கோலத்தில் இருக்கக் கூடிய ஒரு கேலிச் சித்திரத்தை பொய்யான செய்தியுடன் இணைத்து பதிவிட்டுள்ளனர்.

இந்த பொய் செய்தி மற்றும் ஆபாச கேலி சித்திரம் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை அவமதிக்கும் வகையிலும் அவரை பின்பற்றும் கட்சி தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் மற்றும் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திட்டமிட்ட சதி செயலாக உள்ளது. மேலும் எங்களது கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் மதிக்கக் கூடிய அதிமுக கொடியினை அவமதிக்கும் வகையில் எக்ஸ்- சமூக வலைதளத்தில் தவறாகப் பயன்படுத்தி கேலிச் சித்திரம் வெளியிட்டுள்ளனர்.

இத்தகைய செயல்கள் இரு அரசியல் கட்சி தொண்டர்களிடையே வெறுப்பு மற்றும் மோதல் போக்கை தூண்டும் வகையிலும், அதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் வகையிலும் உள்ளது. இந்த செயலானது கீழ்கண்ட சட்டங்களின்படி ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனையடுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன்கீழ் -67 (Publishing or transmitting obscene material) பிரிவு 69A (blocking offensive content) மற்றும் BNS Act 2023ன் கீழ் 익 356 (defamation using electronic means) எனவே மேற்கண்ட அவதூறு பதிவினை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தி.மு.க. IT-Wing மாநிலச் செயலாளர் T.R.B.ராஜா மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து மேற்கூறிய அவதூறு செய்தி மற்றும் ஆபாச கேலி சித்திரத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க அதில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அதிமுக சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு எதுவும் இல்லை. எனவே, முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

அப்போது, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் .ஆ.அருணாசலம், முன்னாள் எம்.பிக்கள் சந்திரகாசி, மருதைராஜா, மாவட்ட அவைத் தலைவர் குன்னம் சி.குணசீலன், மாவட்ட பொருளாளர் பூவை.செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் விஜிஎம் @ வெங்கடாசலம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சித்தளி நாகராஜன், மாவட்ட இணை செயலாளர் எம்.ராணி, மாவட்ட துணை செயலாளர் கு.லெட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் என்.கே. கர்ணன், வேப்பந்தட்டை டி.என். சிவப்பிரகாசம், கே.ரவிச்சந்திரன், வேப்பூர் ஏ.கே.ராஜேந்திரன், கே.எஸ். செல்வமணி, பெரம்பலூர் புஷ்பராஜ், ராமராஜ், செந்துறை உதயம் எஸ்.ரமேஷ், யு.எஸ்.ஏ அழகுதுரை, பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, பேரூர் செயலாளர்கள் குரும்பலூர் செந்தில்குமார், அரும்பாவூர் விவேகானந்தன், பூலாம்பாடி ஆறுமுகம், லப்பைக்குடிக்காடு முஹமது இலியாஸ், மற்றும் வழக்கறிஞர் அணி கனகராஜ், கணேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் ம. வீரபாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எம்.சந்திரகாசன், மாவட்ட ஐடி விங் செயலாளர் திருமால்முருகன், ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் குரும்பாபாளையம் சி.நாகராஜன், கீழக்கரை பன்னீர்செல்வம், எசனை பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் திரளாக உடன் சென்றிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!