Perambalur: Air horns that emit excessive noise and LED lights that obstruct visibility have been seized; traffic police take action!

பெரம்பலூர் மாவட்டத்தில், தற்போது ஜனவரி முதல் மாதம் சாலை பாதுகாப்பு மாதம் நடந்து வருகிறது. போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார் தலைமையிலான போலீசார் பெரம்பலூர் 4 ரோடு பகுதிகளில் வந்த வாகனங்களில் போக்குவரத்து விதிமுறை மீறி அதிக ஒலி எழுப்பி பயணிகள், வாகன ஓட்டிகளை அலறவிடும் ஏர் ஹாரன்கள், எதிர் வரும் சிறு, குறு வாகன ஓட்டிகளுக்கு வழி தெரியாத வகையில் அளவிற்கு அதிகமான வெளிச்சத்தை உமிழக்கூடிய எல்.இ.டி. பல்புகளை பொறுத்தி இருந்ததை பஸ், லாரி, கார், ஆட்டோ, ஜீப், வேன், பைக்குளில் இருந்து பறிமுதல் செய்து அவர்களுக்கு உரிய அறிவுரை கூறினர். எதிர் வரும் சகவாகன ஓட்டிகளை மதிக்க வேண்டும். சாலை உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல அனைவருக்கும் பொதுவானது என்றும், உரிய அபராதம் விதிப்பதுடன், டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர். மேலும், இந்த சோதனையை இரவில் வரும் வாகனங்களை பரிசோதித்து தொடர் நடவடிக்கையாக நன்றாக இருக்கும் என பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!