Perambalur: Alathur AIADMK Union Secretary NK Karnan, AIADMK District Amma Peravai Deputy Secretary Vayalapadi VGM @ Venkatajalam’s wedding ceremony; prominent personalities congratulated the bride and groom!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நத்தக்காடு கிராமத்தைச் சேர்ந்த சி.கிருஷ்ணசாமி உடையார் – அகிலாண்டம் இவர்களின் மகன் வழிப் பேரனும், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா கடம்பன்குடி கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் உடையார் – ராசம்மாள் இவர்களின் மகள் வழிப் பேரனும், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் – முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வி ஆகியோரின் மகனும், இன்ஜினியரும், என்.கே.பி கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் உரிமையாளருமான பிரபாகரனுக்கும்.. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் உடையார் – அஞ்சலையம்மாள் இவர்களின் மகன் வழி பேத்தியும், பெரியசாமி உடையார் – பார்வதி மற்றும் நடராஜ் உடையார் – அம்மாகண்ணு இவர்களின் மகள் வழி பேத்தியும், பெரம்பலூர் அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணைசெயலாளர் விஜிஎம் (எ) வெங்கடாசலம் – செல்வி ஆகியோர்களின் மகளும், வழக்கறிஞருமான அருணாவிற்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்டு, திருமணம் மற்றும் வரவேற்பும் பெரம்பலூர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இன்று மே.25 காலை ராஜேஸ்வரி சின்னமணி திருமண மஹாலில் நடந்தது.

சேலம் மாவட்ட புறநகர் செயலாளரும், முன்னாள் மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏவும், பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளருமான இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், முன்னாள் அரசு கொறடா மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை எஸ். ராஜேந்திரன், முன்னாள் அமைச்சரும், துணை சபாநாயகமான வரகூர் அருணாசலம், பெரம்பலூர் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் வாரிய தலைவருமான மா ரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ரா. குமரகுரு, முன்னாள் அமைச்சர்கள் பா. மோகன், மு பரஞ்ஜோதி, என்.ஆர்.சிவபதி, முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன், அமைப்பு செயலாளர் டி ரத்தினவேல், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆ. இளவரசன் அமைப்பு செயலாளர் திண்டுக்கல் மருதராஜ், முன்னாள் எம்.பி., மா.சந்திரகாசி, , முன்னாள் எம்எல்ஏவும், பெரம்பலூர் மாவட்ட அதிமுக பொருளாளருமான பூவை த‌. செழியன், மாவட்ட அவைத் தலைவர் குன்னம் சி.குணசீலன், மாவட்ட இணை செயலாளர் தழுதாழை எம். ராணி, மாவட்ட தலைமை செயலாளர் வெங்கலம் கு. லட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் வேப்பந்தட்டை டி.என். சிவப்பிரகாசம், கே. ரவிச்சந்திரன், ஆலத்தூர் சசிகுமார், வேப்பூர் ஏ.கே. ராஜேந்திரன், கே எஸ் செல்வமணி, பெரம்பலூர் சி புஷ்பராஜ், ராமராஜ், செந்துறை உதயம் என். ரமேஷ் யூ.எஸ்.ஏ அழகுதுரை, பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, பேரூர் செயலாளர்கள் குரும்பலூர் செந்தில்குமார், அரும்பாவூர் விவேகானந்தன், பூலாம்பாடி ஆறுமுகம், லப்பைகுடி காடு முகமது இலியாஸ் மற்றும் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் என்.ராஜ்குமார், ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குரும்பாபாளையம் சி.நாகராஜன் உள்பட மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கொடி, தோரணங்கள், வரவேற்பு பதாகைகளால் பெரம்பலூர் நகரம் முழுவதும் விழா கோலம் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர் என்.கே. பிரகதீஸ்வரன், – மோனிஷா, மற்றும் தலைமை ஆசிரியர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.சுந்தரி, டாக்டர் அஜித்குமார், அக்ரி ஆர்த்தி, டாக்டர் இளந்தமிழன், அக்ரி இளந்தென்றல் உள்பட இருவீட்டு உறவினர்கள், நண்பர்கள், கட்சியினர் செய்துஇருந்தனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், கரூர், சேலம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த அதிமுக உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள், காவல் துறையினர், வணிகர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மிராசுகள், ஜமீன் மற்றும் உற்றார் – உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் மணமக்களை வாழ்த்தினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!