Perambalur: Alumni donate logistics to Erayur Nehru High School!
அதன் தொடர்ச்சியாக இன்று 2000ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் வழங்கிய 20 செட் மாணவ இருக்கைகள், 1998ல் 12ஆம் வகுப்பு மற்றும் 2011 இல் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் வழங்கிய 9 மின்விசிறிகள், மேலும் தற்பொழுது பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவிகள் இணைந்து வழங்கிய திரைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை பள்ளிக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்..
முன்னாள் மாணவர்களின் இந்த உதவி பொருட்களை நேரு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பெரம்பலூர் வி.ஆர்.எம் அகாடமி நிறுவனருமான அக்ரி மு.மாதவன், முன்னாள் மாணவர்களான தொடர் குருதிக் கொடையாளர் க.மகேஸ்குமரன், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வரும் சதீஷ் , மங்களமேடு மோகனா தேவி , தொழுதூர் ஜெகன்யா, நேரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் வேல்முருகன், விஜய் சிவக்குமார், சாமிக்கண்ணு, கணேஷ் ஆகியோர் இணைந்து, திருச்சிராப்பள்ளி ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலாளர் சுவாமி நியமானந்தா, தலைமை ஆசிரியர் அறிவேந்தன், நிர்வாக அலுவலர் செல்வம், உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி ஆகியோரிடம் வழங்கினர்.
மாணவர்கள் பாடக்கல்வியுடன் போட்டி தேர்வுகளுக்கும் தயாராக வேண்டும் என்று ராமகிருஷ்ண தபோவனத்தின் சுவாமிகள் அறிவுரை வழங்கி ஆசி கூறினார்.
முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அக்ரி மு.மாதவன் உரையாற்றிய பொழுது, மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முன்னாள் மாணவர்கள் தயாராக உள்ளதாகவும் , ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் இரண்டாம் இடம் பெறும் மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் , மேலும் பள்ளியின் முன்னாள் மாணவரும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திரு.ம.பிரபாகரன் அவர்களின் முயற்சிகளால் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.