Perambalur: Anna’s birthday; Bicycle competitions for school students – Top 10 prizes; Collector information

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் 04.01.2025 அன்று காலை 06.00 மணிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் சார்பில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கான அண்ணா மிதிவண்டி போட்டிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவுவாயில் முன் நடைப்பெறவுள்ளது. இந்த மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.

13 வயதிற்குட்பட்ட (01.01.2011 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்) மாணவர்களுக்கு 15 கி.மீ தொலைவிற்கும், மாணவிகளுக்கு 10 கி.மீ தொலைவிற்கும், 15 வயதிற்குட்பட்ட (01.01.2009 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்) மாணவர்களுக்கு 20 கி.மீ தொலைவிற்கும், மாணவிகளுக்கு 15 கி.மீ தொலைவிற்கும், 17 வயதிற்குட்பட்ட (01.01.2007 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்) மாணவர்களுக்கு 20 கி.மீ தொலைவிற்கும், மாணவிகளுக்கு 15 கி.மீ தொலைவிற்கும் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிப் பெறும் மாணவ-மாணவியர்களுக்கு முதல்பரிசு ரூ.5,000 மும், இரண்டாம் பரிசு-ரூ.3,000மும், மூன்றாம் பரிசு ரூ.2,000மும், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு- ரூ. 250ம் மற்றும் தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரன மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!