Perambalur: Appointment of District Gazi; Aspirants can apply; Collector information!
பெரம்பலூர் மாவட்டத்திற்கு காஜி நியமனம் செய்யப்படவுள்ளதால். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய சட்ட சாஸ்த்திரத்தில் புலமை பெற்றவர்கள் அல்லது அரபிக் கல்லூரியிலோ அல்லது அதற்கு இணையாண கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும். 40 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் 05.06.2025-அன்று மாலை 5.00 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.