Perambalur: Are the great achievements the reason for the sky-high praise on the occasion of Chief Minister M.K. Stalin’s birthday? Are they his noble aspirations? Pattimandram!

 

பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க‌. ஸ்டாலினின் 72- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பட்டிமன்றம் வரும் ஏப்.18 அன்று காலை 10 மணியளவில், பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் பெறுகிறது. இந்த பட்டிமன்றத்தில் தலைமை கழக சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் தலைமையில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ர.ராகவி வரவேற்புரையில், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள் தமிழ். கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ம.தமிழ்வேந்தன், பா.ரினோபாஸ்டின், அ.இளையராஜா ஆகியோர் முன்னிலையில், நடைபெறும் பட்டிமன்றத்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

இதில் கே‌.என்.அருண்நேரு.எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பிறந்தநாள் விழா காணும் திராவிட மாடல் முதல்வரின் ஆகாயம் அளாவிய புகழுக்குக் காரணம் முத்தான சாதனைகளா?
வித்தான இலட்சியங்களா? எனும் பட்டிமன்றத்தலைப்பில் தலைமை கழக சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு நடுவராக இருந்து சிறப்புறையாற்றுகிறார். இதில் முனைவர்.மானசீகன், கவிஞர்.மில்லர் மண்டேலா ஆகியோர் வித்தான இலட்சியங்களே எனும் தலைப்பிலும், பேரா.முனைவர்.பு.சி.கணேசன், முனைவர்.இராம.பூதத்தான் ஆகியோர் முத்தான சாதனைகளை எனும் தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.

மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணா இள, நன்றியுரையாற்றுகிறார். இதில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்,இந்நாள் , முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!