Perambalur: Arudra Darshan in observance of the Thiruvathirai festival!

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் திருவாதிரை திருவிழாவையை முன்னிட்டு நேற்று மஞ்சள், பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து இன்று காலை மணியளவில் அலங்கார தீபங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பித்து ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
சோழிய வேளாளர் சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வைத்தீஸ்வரன், பாஸ்கர், சிவசங்கர், நல்லசாமி, சண்முகம், உட்பட சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜர் கேடயத்தில் எழுந்தருளி செக்கடி தெரு, வ.உ.சி. தெரு, பெரிய தெற்கு, தெரு ஐயப்பன் கோவில் தெரு, கடைவீதி, வழியாக வான வேடிக்களுடன் திருவீதி உலா வந்து திருக்கோவில் அடைந்தார். பெரம்பலூர் சோழிய வேளாளர் சங்கத்தினர், இளைஞர் அணியினர் உலாவிற்கு உபயாம் செய்திருந்தனர். பூஜைகளை கவுரிசங்கர், மற்றும் முல்லை சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497