Perambalur: Bank employee arrested for defrauding Rs. 1 crore 2.20 lakh by preparing fake documents!

பெரம்பலூர் அருகே உள்ள லப்பைகுடிக்காடு கனரா வங்கி கிளையில் நகை கடன் பிரிவில் அதிகாரியாக ராஜாஸ்தானை சேர்ந்த ஆகாஷ் சவுகான் (29) என்பவர் கடந்த மே 2022-ல் பணியில் சேர்ந்து பணியற்றி வந்தாகவும், அவர் வங்கி வாடிக்கையாளர் 5 பேர் பெயரில், நகை கடன் விண்ணப்பங்களை போலியான ஆவணங்களை தயாரித்து, தனது வங்கி கணக்கில் மோசடியாக ரூபாய் 1 கோடியே 2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை மோசடியாக கையாடல் செய்தும், ஏமாற்றியதாகவும் போலீசார் விசாரணையில் செய்தது தெரிய வந்தது. பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆபிசில், இது தொடர்பாக, நாமக்கல் மண்டல உதவி பொது மேலாளர் லோக கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து ஆகாஷ் சவுகானை கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!