Perambalur: Boxing training: Collector information!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் “SDAT – ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் ”குத்துச்சண்டை (Boxing) விளையாட்டுக்கு 01.05.2025 முதல் துவங்கப்படவுள்ளது.
குத்துச்சண்டை (Boxing) விளையாட்டில் ஆர்வமுடைய 12 வயது முதல் 21 வயது வரை உள்ள 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவியர்கள் என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும், தேர்வு செய்யப்படும் மாணவ / மாணவியர்களுக்கு, ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்குவதோடு, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுச் சீருடைகள் போன்றவைகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி மேற்கொள்வதற்கு விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கான தேர்வு 28.04.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
12 வயது முதல் 21 வயது வரை உள்ள குத்துச்சண்டையில் (Boxing) ஆர்வமுடைய மாணவ / மாணவிகள் 28.04.2025 அன்று நடைபெறும் தேர்வில் பங்கு பெற்று பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது, மேலும் கூடுதல் தகவல்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், அலுவலகத்திலோ (அல்லது) 74017 03516 என்ற தொலைபேசி எண்ணலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.