Perambalur: Bribe for free silt: Video goes viral!

பெரம்பலூர் அருகே ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகள், இலவசமாக வண்டல் மண் எடுத்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கும், வண்டல் மண் எடுப்பதற்கான அரசாணை கடந்த மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கனிம வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை வட்டாட்சியர் அலுவலகம் என பல்வேறு இடங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி கோரி மனு அளித்தனர். மனுவை கையில் அளித்தால் போதும் என்ற நிலையில், ஆன்லைனில் வண்டல் மண் எடுக்க பல்வேறு விவசாயிகள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த 20 நாட்களாக ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் அனுமதி வழங்கப்படாமல் கிடப்பில் இருந்துள்ளது. இதனை விசாரித்த போது வருவாய் துறையினருக்கு 5000 ரூபாய் பணம் அளிப்பத்தால் மட்டுமே வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வடக்கலூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்காக பொதுப்பணித்துறை ஏரியில் விண்ணப்பித்திருந்தனர். குன்னம் வட்டாட்சியர் அனுமதி அளித்த போதும், வடக்கலூர் கிராம நிர்வாக அலுவலர் செல்லத்துரை பணம் கொடுத்தால்தான் மட்டுமே வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படும் என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் அவருக்கு 5000 ரூபாய் கொடுத்து விட்டு வண்டல் மண் அள்ளியதாக கூறுகின்றனர். இதனை அறிந்த பொதுப்பணித்துறையில் பணி புரியும் முத்துக்குகிருஷ்ணன் என்பவர் வடக்கலூர் ஏரிக்கு வந்தவர் எங்கள் பொறியாளருக்கும் நாள் ஒன்றுக்கு ரூ‌ 3000 அளிக்க வேண்டுமென கூறி வண்டியை மறித்ததாகவும் கூறுகின்றனர். அவருக்கும் 3000 ரூபாய் பணத்தை ரொக்கமாக செலுத்தி வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து வந்து உள்ளனர் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரிடம் 3000 ரூபாய் நேரடியாக கொடுக்காமல் அந்த ஏரியின் தலைவர் இடம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தமிழக அரசு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டாயமாக பணத்தை வசூல் செய்து பின்னரே வண்டல் மண் எடுக்க அனுமதிக்கும் சம்பவம் விவசாயிகளை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், வண்டல் மண்ணே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் கிரேசி பச்சாவ் தலையிட்டு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!