Perambalur: Bus passes for the differently-abled extended for 3 months; Perambalur Collector announces!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திவரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை 31.03.2025 வரை செல்லத்தக்க வகையில் வழங்கப்பட்டு இருந்த பேருந்து பயண அட்டைகளின் மூலமாகவே மேலும் 3 மாதங்கள் 30.06.2025 வரை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை செயல்படுத்த போதிய காலஅவகாசம் தேவைப்படுகின்ற நிலையில் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்திவரும் 31.03.2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை 30.06.2025 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என கலெக்டர் கிரேஸ் லால் ரிண்டகி பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு, தெரிவித்துள்ளார்.