Perambalur: Bus stand roof collapses on student waiting for bus, injuring her!

Model Photo

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் கிராமத்தை சுமார் 17 வயது மாணவி ஒருவர் இன்று மதியம் தலைவாசல் செல்வதற்காக பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது பெண் மீது மேலே இருந்த கான்கிரீட் தளத்தின் பூச்சுடன் பெயர்ந்து விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டு வழிந்தது. அந்த பெண் வலியால் அலறி துடித்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆறுதல் கூறி தேற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற உறவினர்கள் உதவியுடன் சொந்த ஊருக்கு சென்றார். இச்சம்பவம் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், முறையான பாராமரிப்பு இல்லாததால், பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை அடிக்கடி பயணிகள் தலையில் விழுந்து வருவாததாக தினமும் வந்து செல்லும் பயணிகள் தெரிவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் வசூலை மட்டும் கணக்கில் கொள்ளாமல் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகளுக்கும், அங்கு கடை நடத்தி வரும் வணிகர்களின் நலனை கருத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜாராஜன் கட்டிய கோவலில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கின்று தமிழரின் கட்டிடக் கலையை பறைசாற்றுகிறது. ஆனால், பெரம்பலூரில் புது பஸ் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்குள்ளேயே பாழாய் போவதை பார்த்து பொதுமக்கள் நொந்து செல்கின்றனர். 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!