Perambalur: Car crashes into tree; 3 people including a child die! Doctor seriously injured!
பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை விபத்திற்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பெண் சித்தா டாக்டர் மற்றும் உடன் பயணித்த நாய்க்கு ஒரு கண் பறிபோனது.
கன்னியாகுமாரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகா சூரங்குடி அருகே உள்ள தெற்கு கிரிவளை கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன் மகன் பாலபிரபு (28), இவர் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், சென்னை சித்த மருத்துவம் படிக்க, திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா இச்சிப்பட்டி அருகே உள்ள பூசாரி தோட்டத்தை சேர்ந்த கவுரி (27). வந்துள்ளார். பாலபிரபுவிற்கும் கவுரிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் பெற்றோர் சம்மத்துடன் திருமணம் நடந்துள்ளர். அதில், காவிகா என்ற 2வயது குழந்தை பெண் குழந்தை உள்ளது.
டாக்டரான கவுரி சென்னை பல்லாவரத்தில் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஊரில் நடக்கும் விசேச நிகழ்ச்சிக்கு சென்ற பாலபிரபு, கவுரி மற்றும் குழந்தை காவிகா, கவுரியின் தந்தை கந்தசாமி ஆகியோர் இன்று அதிகாலை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று விட்டு சென்னைக்கு ஒரு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். காரை பாலபிரவு ஓட்டி சென்றார். கார், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்த போது, இன்று காலை 7.50 மணி அளவில் கட்டுப்பாட்டை கார் இழந்த சாலையை விட்டு விலகி புளியமரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் காரில் பயணம் செய்த, பாலபிரபு, அவரது மாமனார் கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தை காவிகாவை போலீசார் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. மேலும், பலத்த காயமடைந்த சித்தா டாக்டர் கவுரியை மீட்ட போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர்களுடன் பயணித்த நாய் ஒன்றுக்கு ஒரு கண் பறிபோனது. அதனையும் போலீசார் சிகிச்சைக்கு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.