Perambalur: Chief Minister’s special camp with the people; Minister C.V. Ganesan provided government welfare assistance worth Rs. 16.41 crore!
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எளம்பலூர், செஞ்சேரி, எசனை, லாடபுரம் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட டி.களத்தூர் ஆகிய கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான 3ம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடந்தது. பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, 1,897 பயனாளிகளுக்கு ரூ.16.41 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எளம்பலூர், இந்திரா நகர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 463 நபர்களுக்கு ரூ.3,29,90,551 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 331 நபர்களுக்கு ரூ.3,23,23,779 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், எசனை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 270 நபர்களுக்கு ரூ.2,65,77,564 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 394 நபர்களுக்கு ரூ.3,49,41,502 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், டி.களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 439 நபர்களுக்கு ரூ.3,72,50,566 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 1,897 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம், தையல் இயந்திரம், வெங்காயக் கொட்டகை அமைக்க ஆணைகள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் என பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.16,40,83,962 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், உள்பட திமுக கட்சி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.