Perambalur: Chitra Paunarmi; Sri Anandavalli, Sri Chandrasekhara and Sri Sitadevi, Sri Rama, Sri Lakshmana and Hanuman, along with fireworks, parade along the Thiruveedi!

Sri Anandavalli, Sri Chandrasekharar

பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி செக்கடி தெரு, வ.உ.சி.தெரு, பெரிய தெற்கு தெரு, ஐயப்பன் கோவில் தெரு, கடைவீதி வழியாக மங்கல வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கைகளுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவிற்கு ஆறு நாட்டு வேளாளர் சங்கம் உபயம் செய்திருந்தது. முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், நடராஜன், சிவக்குமார், சிவராஜ்,உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Sri Sitadevi, Sri Rama, Sri Lakshmana and Hanuman,

இதே போல, பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு மாலை ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ ராமர் ஸ்ரீ லட்சுமணர் அனுமான் கேடயத்தில் பிரபை அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியம் முழங்க நான்கு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்தார். முன்னாள் அரங்காவலர் வைத்தீஸ்வரன், ராமலிங்கம், நாதப்பன் உட்பட ஏராளமானர் மற்றும் சீர்பாத பணியாளர்கள் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர். செயல் அலுவலர் என். ரவிச்சந்திரன் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!