Perambalur: Civil engineers protest, demanding that the government take over and run the quarries!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில், கட்டுமான பொருட்களன் விலையை ரத்து செய்யக் கோரியும, அரசு ஏற்று நடத்தவும் வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் கண்டன ஆர்பாட்டமும் நடத்தினர். அச்சங்கத்தின் மாநில செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்களின் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும், கல்குவாரிகளை அரசுடமையாக்கினால் அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். பொதுமக்களுக்கும் தரமான கல்குவாரி பொருட்கள் நியாயமான விலையில் கிடைத்திடும். எனவே அதற்கான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும், அதிகமாக உயர்த்தப்பட்டுள்ள கட்டட அனுமதி கட்டணத்தைக் குறைக்க கோரியும்…
28 சதவீதம் வரையுள்ள கட்டட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க கோரியும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்ககோரியும், கட்டுமானப் பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க கோரியும், ஆற்று மணல்குவாரிகளை உடனடியாக திறக்க கோரியும், சிமெண்ட், கம்பி விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், கட்டுமான தொழிலுக்கு உதவும் வகையில் கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க ஆவனம் செய்யவும், கோசங்களை எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்க மாநில செயலாளர் சிவக்குமார் தெரிவித்தாவது; அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், இல்லை எனில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படுவர், ஏழைகளின் வீடு என்பது கனவாகிவிடும். மேலும், வரும் 19ம் தேதிக்குள் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அனைத்து சங்கத்தினரும், முடிவு செய்துள்ளோம். மேலும், அரசு ஒப்பந்த பணிகள் நிறுத்தப்படும். அரசு கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது பெரம்பலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தை சேர்ந்த கலைநாதன், ராஜசேகர், ஜோதிவேல், பாலு,ராஜாசிதம்பரம், குணாளன், விஜயராஜ், கிரிபிரசாத், உள்ளிட்ட பல பொறியாளர்கள், கட்டுனர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கட்டுமான துறையைச் சார்ந்த அனைத்து அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.