Perambalur: Collector invites proposals for setting up a common market facility center for self-help group products!

பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2025-2026 ஆம்; ஆண்டில், பெரம்பலூர் வட்டாரத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புகளுக்கான பேக்கிங் மற்றும் லேபிளிங் செய்வதற்கு பொது சந்தை வசதி மையம் அமைக்கப்பட உள்ளது.

பொது சந்தை வசதி மையம் அமைக்க விரும்புவோர் பொருளாதாரம், வணிகம் சந்தைப்படுத்துதல் துறையில் பட்டதாரியாக இருக்க வேண்டும். மேலும் தயாரிப்புகளின் மதிப்பு கூட்டல், பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதல் வழிகாட்டுதல் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரியாக இருத்தல் வேண்டும். மதிப்பு கூட்டல், பேக்கிங், பேக்கேஜிங், பிராண்டிங் மற்றும் லேபிளிங் ஆகியவற்றிற்காக பொது சந்தை வசதி மைய (CMFC) ஒருங்கிணைப்பாளர் ஆதரவு நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

பொது சந்தை வசதி மையம் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளுக்கும், அவற்றின் உற்பத்தி அளவிற்கும் சந்தை இணைப்புகளை ஒருங்கிணைப்பை எற்படுத்த வேண்டும். சுய உதவிக்குழு தயாரிப்புகளுக்கான சந்தைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்துவதில் உதவி செய்வதற்காக CMFC பல்வேறு தொழில்நுட்ப ஆதரவு நிறுவுனங்கள் (TSA), திட்ட மேலாண்மை அலகுகளுல் (PMU), DSMS, SSMS ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்க வேண்டும். மின் வணிகம், சமூக ஊடகங்களில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் அத்தகைய சந்தைப்படுத்தல் தளத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சுய உதவிக்குழுக்களின் சந்தைப்படுத்த வாகனங்கள் வீடு வீடாக சந்தைப்படுத்தல், கண்காட்சிகள் மூலம் வழிகாட்ட வேண்டும்.

வடிவமைப்பு மென்பொருள் அறிவு உள்ள பட்டதாரியாக இருக்க வேண்டும். CMFC சமூக ஊடகங்கள், காணொளி, புகைப்படம் எடுத்தல் மற்றும் சுய உதவிக்குழு தயாரிப்புக்கான அவற்றின் மேம்பாட்டு கருவிகள் பற்றிய சிறந்த அறிவு இருக்க வேண்டும். CMFC கணினி உதவியுடன் பதிவேடு இருப்பு மற்றும் விற்பனையம் நிர்வகிக்க வேண்டும். மேற்காணும் தகுதியுடையவர்கள் 31.12.2025க்குள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!