Perambalur: Constituencies with a large number of Yadavs should be redrawn on a rotational basis; Interview with GMK founder M.V. Sekar!

பெரம்பலூரில் கோகுல மக்கள் கட்சியின் 12ம் ஆண்டு தொடக்க விழா, மாவட்ட யாதவர்களின் குடும்ப விழா, கல்வி ஊக்கதொகை வழங்கும் விழா ஆகியன முப்பெரும் விழா நடந்தது.

விழாவிற்கு மாநில செயலாளர் அம்மன் முத்தையா தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் சுந்தரம், நகர அவை தலைவர் ராமராஜ், மாவட்ட நிர்வாகிகள் மல்லிகா, ஜெயராமன், பெரியசாமி, கோவிந்தசாமி, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் பாஸ்கர் குத்துவிளக்கேற்றிவைத்தார். பொறுப்பாளர் திருவள்ளுவர் கட்சி கொடியேற்றி வைத்தார்.

மாநில மகளிரணி செயலாளா ரஜினி, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயபிரகாஷ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆதவன், மண்டல செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர். கோகுல கட்சியின் நிறுவனரும், தலைவருமான சேகர் கலந்து கொண்டு ஸ்ரீமுத்தையா கல்வி அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12ம்வகுப்பு அரசு பொதுதேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முறையே ரூ 30 ஆயிரம், ரூ. 20 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் வீதம் கல்வி ஊக்க தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக விளையும் மக்காச்சோளத்தை கொண்டு கோழி தீவன தொழிற்சாலையும், சின்ன வெங்காயத்தை கொண்டு மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையும். மலர் சாகுபடியை கொண்டு நறுமண பொருட்கள் உற்பத்தி ஆலையும் மத்திய, மாநில அரசுகள் அமைத்து இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். மக்காசோளம் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை நீக்க வேண்டும். தமிழ்நாட்டில் கால்நடை வளர்ச்சி வாரியத்தை நிறுவி, அதன் தலைவராக யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த. ஒருவரை நியமிக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி நிறுவி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சிவில் சர்வீஸ், டிஎன்பிஎஸ்சி , மத்திய தேர்வாணைய தேர்வு, ரயில்வே, ரெக்ரூட்மெண்ட், வாரியத் தேர்வு போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி மையத்தை அமைத்திட வேண்டும்.

பெரம்பலூர்- ஆத்தூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் யாதவ சமுதாயத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் சட்டசபை , உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆட்சி அமைப்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!