Perambalur: Consumer court orders compensation to farmer for not providing training and receipt!
பெரம்பலூர் மாவட்டம், நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அய்யம்பெருமாள், இவர் பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் மல்பெரி சாகுபடி செய்ய விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 3 ஆயிரம் மல்பெரி செடிகள் நடவு செய்ய கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பட்டு வளர்ச்சித் துறை சார்பில் கட்டணமாக 7500 பெற்றுக் கொண்டு, ரசீது வழங்காமல் இருந்துள்ளனர். மனுதாரர் ஆன அய்யம்பெருமாள் ரசீது கேட்டு பலமுறை அதே அருகில் இடம் அலைக்கழித்துள்ளனர்.
மேலும், மல்பெரி சாகுபடி குறித்த முறையான பயிற்சியை அதிகாரிகள் வழங்காமல் விட்டுள்ளனர். இதனால் அவர் சாகுபடி செய்யும் முறை தெரியாமல் தவித்து வந்துள்ளார். அதே நேரத்தில், கிணற்றில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக மல்பெரி செடிகள் காய்ந்து போயின. இதுகுறித்து மனுதாரர் ஐயம்பெருமாள் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளார். அங்கு, அவருக்கு முறையான பயிற்சியும், காப்பீடு செய்ததில் இருந்து இழப்பீடு வழங்கவும் தெரிவித்துள்ளனர். ஆனால், பட்டு வளர்ச்சித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால்,
இதுகுறித்து அய்யம்பெருமாள், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தனக்கு இழப்பீடாக 3 லட்ச ரூபாயும், வழக்கு செலவு தொகையாக ரூ. 50ஆயிரமும் வழங்க வேண்டியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை தலைவர் ஜவகர் மற்றும் உறுப்பினர்கள் திலகா மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரித்து வந்த நிலையில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற குறைதீர் ஆணையம் பாதிக்கப்பட்ட அய்யம்பெருமாளுக்கு, கட்டணமாக பெற்றுக் கொண்டு மல்பெரிகள் செடி வழங்கியதோடு, அதற்கு உரிய ரசீது வழங்காததற்கும், முறையான சாகுபடி குறித்த பயிற்சி கொடுக்காததற்கும், பயிருக்கு உரிய காப்பீட்டுத் தொகை பெற்று தராததற்கும், பட்டுவளர்ச்சி துறையினர் பாதிக்பட்ட அய்யம்பெருமாளுக்கு, இழப்பீட்டு தொகையாக ரூ 50 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரத்தையும் வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர்.