Perambalur: Deputy Chief Minister Udhayanidhi Stalin to visit Anaimuthu centenary and welfare scheme distribution ceremony; Nilgiris MP A. Raja and Minister Sivashankar inspect the venue!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிக்கள் வழங்கும் விழா 12.03.2026 அன்று காலை பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழா நடைபெறவுள்ள இடத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
இந்நிகழ்வில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்க உள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காக போராடி, மண்டல் குழு அமைக்க காரணமாக இருந்த “மண்டல் குழுவின் தந்தை” என போற்றப்படும் சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கோரிக்கை வைத்ததையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழாவினை மாவட்ட அளவிலான அரசு விழாவாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலும் நடத்திட உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 12.03.2026 அன்று பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட உள்ளார். மேலும், சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
இவ்விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். அந்த நிகழ்ச்சிக்காக பாலக்கரை பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு வருவதை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வாகனங்களை நிறுத்தி வைக்க போதிய இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் நிகழ்விடத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கினர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பெரம்பலூர் பிரபாகரன், ஜெயங்கொண்டம் கா.சோ.கண்ணன், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத்தலைவர் ஆதவன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் டி.சி.பாஸ்கர், மரு.கருணாநிதி, மகாதேவி ஜெயபால், திருச்சி சர்வதேச விமான நிலையக்குழு உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர் மற்றும் முன்னாள் சேர்மன்கள் அழகு.நீலமேகம், பிரபா செல்லப்பிள்ளை, ராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497