பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுவரியில் 20வது ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் குத்து விளக்கேற்றிவைத்து தொடங்கி வைத்து பேசுகையில், மாணவிகளின் வளமான வாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகளையும் கடைபிடித்து, ஒரு லட்சியத்தோடு வாழ்க்கையை பெண்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப்பதிவாளர் திருச்செல்வம் பேசுகையில், பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறி வருகின்றனர்.
இக்காலக்கட்டத்தில் பெண்களுக்கு அனைத்து துறையிலும் வாய்ப்பு அதிகம் உள்ளது, அதனை மாணவிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து துறையினைச் சார்ந்த அடிப்படை அறிவினை வளர்த்துக் கொண்டு,எந்த ஒரு செயல்பாடுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதிக மொழியறிவு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் ஒவ்வொரு துறையிலும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கல்லூரியின் முதல்வர்(பொ) அப்ரோஸ் வரவேற்று, ஆண்டு அறிக்கையை வாசித்தார். ஏற்பாடுகளை நுண்ணுரியல் துறை பேராசிரியர் பவித்ரா, வணிகவியல் துறைத்தலைவர் சாந்தி, மேலாண்மை துறைத்தலைவர் திலகவதி, தமிழ்த்துறை பேராசிரியர் சூரியா, ஆங்கிலத் துறைத்தலைவர் வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் துணைமுதல்வர் கஜலட்சுமி நன்றி கூறினார்.