Perambalur District Board of Trustees Chairman A.Kaliyaperumal, 4 people sworn in as members!

பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக ஆ.கலியபெருமாளும், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தழுதாழை டி.சி‌. பாஸ்கர், டி.கே.ராமச்சந்திரன், சண்முகம்,கோகிலா சேகர் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் சி.செல்வராஜ் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினார்.

இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையர் லட்சுமணன் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி. இராஜேந்திரன், தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.ந.பெருநற்கிள்ளி,
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், ஒன்றிய செயலாளர் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி,

பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை, துணை பெருந்தலைவர் சாந்தாதேவிகுமார், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் ம.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, வீ.ஜெகதீசன்,தி.மதியழகன், சி.ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ்,வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஏ.எம்.கே.கரிகாலன், தங்க.கமல், டி.ஆர்.சிவசங்கர்,

காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், ம.தி.மு.க.ஜெயசீலன், தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ராமராஜ், ஈஸ்வரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ)அப்துல் பாரூக், லாடபரம் செம்பருத்தி, முக்கிய பிரமுகர்கள் கணேசன், ரேணுகா சில்க்ஸ் செந்தில், சுப்புடு, ஜமால், வைததீஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், பெரம்பலூர் மதனகோபாலசாமி, செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் சார்பில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தழுதாழை பாஸ்கர், டி.கே.ராமச்சந்திரன், சண்முகம்,கோகிலா சேகர் ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தேகளை தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!