Perambalur: District DMK celebrates the Kalaigar’s birthday by distributing sweets
பெரம்பலூர் ஒன்றியம், நெடுவாசல் கிராமத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் இலவச பஸ் பாஸ் திட்டத்தினை எடுத்துக் கூறி, திராவிட மாடல் அரசின் பள்ளி மாணவர்களுக்கான திட்டங்களை விளக்கி, நோட்டுப் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கி டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ..ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ம.ராஜ்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் நெடுவாசல் கிராம கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.