Perambalur: District DMK consultative meeting; Principal Secretary Minister K.N. Nehru delivers a special address; District in-charge V. Jagatheesan reports!
பெரம்பலூர் மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம், தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள சுபா ரெசிடென்சியில், நாளை மாலை 6 மணியளில் நடக்கிறது. திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு கலந்து கொண்டு, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி சிறப்பு உரையாற்றுகிறார். போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கே.என். அருண் நேரு. எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்
எம். பிரபாகரன், தொகுதி பொறுப்பாளர்கள் தங்க.சித்தார்த்தன், ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.