Perambalur: District DMK Executive Committee meeting! District in-charge V. Jagatheesan’s report!

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ..ராசா எம்.பி., அறிவுறுத்தலின்படி, போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், கே.என்.அருண்நேரு. எம்.பி.,- சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோரது முன்னிலையில் , ஆக.18 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு, பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497