Perambalur: District DMK Executive Committee meeting! District in-charge V. Jagatheesan’s report!

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை மாலை 3மணி அளவில், மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன் தலைமையில், கே.என்.அருண்நேரு.எம்.பி.,- சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடக்கிறது. இதில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தில், ஜீன்.1, மதுரையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் குறித்தும், ஜீன்.3 முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்தும், நாடு போற்றும் 4 ஆண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் குறித்தும், கட்சி ஆக்கப் பணிகள் குறித்தும், விவாதிக்கப்பட உள்ளது.
இதில் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்










kaalaimalar2@gmail.com |
9003770497