Perambalur: District DMK Women’s Wing – Women Volunteers Wing Advisory Meeting!
பெரம்பலூர் மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமையில், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், வரும் ஜூன் 3 அன்று கலைஞர் பிறந்த நாளை மகளிர் அணி சார்பில் சிறப்பாக கொண்டாடுவது எனவும் 2026 – சட்டமன்ற தேர்தலில் தலைமை கழகம் அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர்கள், நூருல்ஹிதாஇஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளரகள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், பூலாம்பாடி பேரூர் செயலாளர் செல்வலெட்சுமி சேகர், மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் பாத்திமா செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் தனலட்சுமி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் அங்கயற்கண்ணி, விஜி புளோரா ரெஜி, புஷ்பராணி, செல்வராணி, வலை தள பொறுப்பாளர்கள் ஜெயப்பிரியா, முருகேஸ்வரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை தலைவர் சாந்தி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் சுதா,நட்சத்திரம், பரமேஸ்வரி, சுமதி, வலை தள பொறுப்பாளர்கள் சங்கீதா, கண்ணகி ஆகியோர் கலந்து கொண்டனர்.