Perambalur: District Quarry, Crusher & M.Sand Owners Association opening ceremony! State President K. Chinnaswamy inaugurated it!!
பெரம்பலூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர் மற்றும் எம்.சாண்ட் உரிமையாளர்கள் சங்க திறப்பு விழா 4 ரோடு அருகே முன்னாள் எம்.எல்.ஏவும், அச்சங்கத்தின் கவுரவ தலைவர் ஆர்.டி.ராமச்சந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர் எஸ். நந்தகுமார் முன்னிலையில் மாநில செயலாளர் கே.சின்னசாமி திறந்து வைத்தார். மாநில செயலாளர் ஜி.முத்துகோவிந்தன், மாநிலத் துணைச் செயலாளர் பி.நந்தகுமார், மாநில பொறுப்பாளர் கே.பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் ராஜா, முருகானந்தம், தனசேகரன், பாபு, லியாகத் அலி, சுப்பிரமணி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் சத்யராஜ் வரவேற்றார். எசனை பி எம் எஸ் முத்துசாமி, எளம்பலூர் கே.சி.ஆர். குமார், கவுல் பாளையம் செல்வகுமார், எஸ்.பி.டி கிரசர் இளங்கோவன், ஆர்.டி.ஆர் கோகுல், எசனை, வெங்கலம், தொண்டைமாந்துறை, எளம்பலூர், செங்குணம், கவுள்பாளையம், கல்பாடி எறையூர், பாடாலூர், அருமடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குவாரிகளின் உரிமையாளர்கள் உள்பட அதிமுக, திமுக, ஐஜேகே, விசிக கட்சிகளை சேர்ந்த குவாரி உரிமையாளர்கள் மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். பொருளாளர் ரவி நன்றி கூறினார் .