மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவித்ததை தொடரந்து, தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் தேர்தலை நடத்திட பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து தொடர்ந்து கண்கானித்திட பறக்கும்படை, தீவிர கண்கானிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் முறையாக கண்கானிக்கப்பட்டு வருகின்றன.
15.3.2016 அன்று வி.களத்தூர் பகுதியில் உரிய அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததற்காகவும், உரிய ஆவணங்களின்றி மதுபாட்டில்களை கொண்டு சென்றதற்காகவும், உரிய அனுமதியின்றி கட்சிக் கொடிகளை வாகனங்களை கட்டி பயணம் செய்தது,
அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகளை அகற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் 12 வழக்குகளும், குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, என தெரிவித்துள்ளார்.