பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(30), இவரது மனைவி சுகன்யா(28), இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஷீம்(5), சபரீஷ் (8 மாதம்) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே டிரைவரான குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கனவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்த சுகன்யா நேற்று இரவு பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த அவரது குடும்பத்தார் சுகன்யாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனயில் அனுமதித்தனர். இதில் சிகிச்சையின் போது சுகன்யா பரிதாபதாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.