Perambalur: Drones banned for 2 days; Collector order
தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 15ம்தேதி அரியலூர் மற்றும்
பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தருகிறார்.
எனவே முதல்வர் பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திரும்ப செல்லும் வரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய அனைத்து பகுதிகளும் சிவப்பு மண்டலமாக கருதப்படுவதால், பாதுகாப்பு காரணம் கருதி பெரம்பலூர் மாவட்டத்தில் 14ம்தேதி காலை 10 மணி முதல் மற்றும் 15ம்தேதி இரவு 10 மணிவரை எந்தவித ட்ரோன்களும் இயக்க தடைவிதிக்கப்படுகிறது.
தடையை மீறி டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.