Perambalur: E-KCC crop loans for new farmers through cooperative credit societies; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் எல்லைக்குட்பட்ட புதிய சிறு மற்றும் குறு விவசாய உறுப்பினர்களுக்கு இ-கேசிசி முறையில் பயிர்க் கடன் வழங்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 55 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் 10 ரூபாய் நுழைவுக் கட்டணம் மற்றும் 100 ரூபாய் பங்குத் தொகை செலுத்தி புதிய உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளலாம். மேலும், கடன் அனுமதிக்கும் போது கடனுக்கு உரிய பங்குத் தொகையைச் செலுத்த வேண்டும். இப்பயிர்க் கடனுக்கு சங்கங்களை நேரில் அனுகியோ அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலமாகவோ இ-கேசிசி முறையில் பெற்றுக் கொள்ளலாம். ரூ.1.60 இலட்சம் வரை எவ்விதப் பிணையமும் இன்றியும், ரூ.3. லட்சம் வரை நகை மற்றும் நில அடமானத்தின் பேரில் கடன்களைப் பெற்றுக் கொள்ளலாம். இக்கடன்களுக்கான தவணைக் காலம் ஓர் ஆண்டாகும். தவணை தேதிக்குள் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு, அதற்கான முழு வட்டித் தொகையை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497