Perambalur: Oil palm seedlings at subsidized rates; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – எண்ணெய் பனைத்திட்டம் – 2026-27 திட்ட செயலாக்கத்திற்கு பொருள் இலக்காக 15 எக்டர் மற்றும் நிதி இலக்காக ரூ.4.35 லட்சம் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை ஊக்குவிக்க மானிய விலையில் எண்ணெய் பனை கன்றுகள் கோத்ரஜ் நிறுவனம் மூலம் வழங்கப்படஉள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை ஊக்குவிக்க மானிய விலையில் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.29000 எண்ணெய் பனை கன்றுகள் வழங்கப்படுவதுடன் ஏற்கனவே, எண்ணெய் பனை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு அதாவது இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊடுபயிரிடுதல் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக ஹெக்டர் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5250/- வழங்கப்பட உள்ளது,
விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம், என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497