Perambalur: It is amusing that Vijay, who once asked the CM not to say “sorry” but to deliver justice, is now maintaining silence; former Minister Sivasankar speaks to the press.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்திப்பில் தெரிவித்தாவது: தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிக்கு அதிமுக தான் காரணம் என்றார். மேலும், அதிமுகவில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதில் அதிருப்தி இருந்த போதும் 38000 வாக்குகள் வாங்கி இருந்தார். ஆனால், நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 18000 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார். மீதி ஓட்டுகள் த வெ கவிற்கு சென்றுவிட்டது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெரிய கட்சி நம்மோடு கூட்டணிக்கு வருகிறது! கொடி பறக்குது!! என பேசினார். இதனால், தொண்டர்கள் நிலை குலைந்து போனார்கள். அதனால்தான் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக இடங்களில் த வெ க வெற்றி பெற்றது. அதிமுகவினர் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என்று கூறினார்.

தமிழகத்தில் விஜயின் ஆட்சி அமைந்ததே ஒரு மோசமான சூழலாக உள்ளது என தெரிவித்தவர், ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்ட திமுக அதிமுகவின் திட்டங்களை தங்களது திட்டங்களைப் போல தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறது என்றும், அதிமுகவை குறிவைத்து கட்சியை கைப்பற்ற முயலும் தவெக அரசு அதற்காக அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து அதிமுக ஆட்சியின் மருத்துவ படிப்புக்காக 7.5 சதவீத இடஒதுக்கீடு திமுகவின் வேளாண் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான இடஒதுக்கீடுகளை தவெக வழங்கியதைப் போன்று தற்போது பணியாளர்களுக்கு ஆணையை வழங்கியுள்ளது என விமர்சித்தார். கரூரில் முதல்வர் வழங்கிய அரசு பணி ஆணை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பியுள்ள இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கும் அரசு பணி வழங்க கோரியது போல், இனி இதுபோல் பல்வேறு கருத்துகளும் வலுக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அண்ணாமலையின் புதிய கட்சி தொடக்கம் என்பது பாஜகவால் நேரடியாக கால் ஊன்ற முடியாத தமிழகத்தில் B, C மற்றும் D போன்ற அதன் அடுத்த அமைப்பாகவே செயல்படும் என விமர்சித்தார். மேலும், அமைச்சரவையில் இடம்பெறுமா இடதுசாரி என்ற எதிர்பார்ப்புக்கு அவர்கள் திமுகவுடன் இருந்த இணக்கம் போல் தவெகவுடன் இல்லை. அவர்கள் எதிர்பார்த்த ஆட்சியாகவும் தவெக இல்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து, விசிக திருமாவளவனின் இரு துருவ போட்டி கருத்து என்பது விஜயின் திமுக தவெக போட்டி என்கின்ற கருத்தையே அவரும் தெரிவிப்பதாக கூறினார். மக்களுக்கான பிரச்சினையின் போது கடந்த ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் பாதிப்புகளுக்கான கருத்துக்களையும் வருத்தத்தையும் தெரிவித்தார். ஆனால், தற்போதைய முதல்வர் அப்படி அல்ல ரசிகர்களுக்காக மட்டும் மேடையேறி தன் கருத்தை மட்டுமே பேசும் ஒருவராக உள்ளாரே தவிர மக்களுக்கான கருத்துக்களை அவர் பேசுவது இல்லை. அண்மையில் நிகழ்ந்த லாக்கப் மணரம் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் முதல்வர் மவுனமாக மட்டுமே இருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் நடந்த இது போன்ற சம்பவங்களுக்கு சாரி சொல்லாதீங்க சி.எம் சார் நீதி கொடுங்க என கேட்ட விஜய் , தற்போது மவுனம் காப்பது வேடிக்கையாக உள்ளது என சாடினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், மதியழகன் அழகு. நீலமேகம், மாவட்ட துணை செயலாளர் சன் சம்பத், முன்னாள் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் கருணாநிதி உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!