Perambalur: Permanent Lok Adalat helps student resume studies by securing certificates from the college administration!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை (வட்டம்), மலையாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் நிஷாந்த் என்பவர் அரும்பாவூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் படிப்பை நிறுத்தி விட்ட நிலையில், மாணவரின் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், மற்றும் கல்லூரி சான்றிதழ் பெற முடியாமல் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரணை செய்த பெரம்பலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றம் தலைவரும் (பொறுப்பு) மாவட்ட நீதிபதியுமான முனைவர் எல்.எஸ். சத்தியமூர்த்தி உத்தரவின்படி, கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவிப்பு அனுப்பி வரவழைத்து, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலளாரும் சார்பு நீதிபதியுமான ஏ.சரண்யா மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் எஸ்.காமராசு ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தி, மாணவனின் மீண்டும் படிப்பை தொடர உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!