Perambalur: Drone-based measurement work at stone quarries; Collector inspects in person.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட தேவையூர் மற்றும் குன்னம் வட்டத்திற்குட்பட்ட கீழப்புலியூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில், குத்தகை விதிமுறைகள் முறையாக பின்பற்ற படுகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் கல்குவாரி செயல்படும் நிலத்தை ஆளில்லாத விமானம் மூலம் மிக துல்லியமாக அளவிடும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷரண்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு குத்தகைதாரர்கள் குத்தகை வழங்கப்பட்ட எல்லைக்குள் மட்டுமே குவாரி பணி மேற்கொள்கிறார்களா, குத்தகை எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி குவாரி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது குத்தகை எல்லைக்கு வெளியே சட்டவிரோதமாக குவாரி பணிகளில் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறியவும், விதி மீறல்கள் இருப்பின் சட்டங்களின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!