Perambalur: Student Cabinet at Almighty Vidyalaya Public School; MLA Sivakumar Administers the Oath of Office!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைவர், துணைத் தலைவர், ஹவுஸ் கேப்டன், வைஸ் கேப்டனுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, அதில் தேர்வானவர்களுக்கு பதவியேற்பு விழா சேர்மன் முனைவர் ஆ.ராம்குமார் தலைமையில் நடந்தது. முதல்வர் சாரதா, துணை முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி. சிவகுமார் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்து
சிறப்புரையாற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் பள்ளி மாணவர் தலைவர், துணைத் தலைவர், கேப்டன், துணை கேப்டன், அமைச்சரா தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.

உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அலுவலக உதவியாளர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். துணைச் சேர்மன் மோகனசுந்தரம், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!