Perambalur: Son beaten to death after quarrelling with mother while intoxicated!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூர் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பூராசாமி செல்வி (55) . இவர்களுக்கு விக்னேஷ், வினோதினி, பூபதி ஆகியோர் உள்ளனர். விக்னேஷ் திருமணமாகி தாய் செல்வியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். பூபதி அவ்வப்போது குடித்து விட்டு தாயிடம் தகராறு செய்வதும், அடிப்பதுமாக இருந்துள்ளார். வழக்கம் போல் நேற்றும் வேலைக்கு போகாமல் குடித்து விட்டு, ஊர் சுற்றி வந்த நிலையில், நேற்று இரவு போதையில் இருந்துள்ளார். அளவிற்கு அதிகமான போதை தலைக்கேறிய போதையால் பூபதி தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தாய் மகனை அடித்தே கொன்றார் என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த பூபதியின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!