Perambalur: Self-enumeration as part of the census begins tomorrow; Collector announces.

பெரம்பலூர்: மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சுய கணக்கெடுப்பு நாளை தொடக்கம்; கலெக்டர் தகவல்!
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு காலம் (Self Enumeration Period) நாளை (ஜூலை 17) முதல் தொடங்குகிறது. இதற்காக SE.CENSUS.GOV.IN என்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அலைபேசி / கணினி வாயிலாக மேற்கண்ட முகவரியினை பதிவு செய்து Self-Enumeration (SE) என்ற தலைப்பினை தேர்வு செய்து தங்களது வீடுகள் பற்றிய 34 வினாக்களுக்கான விவரங்களையும் தானாக முன்வந்து விடுதலின்றி நிரப்பிடலாம்.
சுய கணக்கெடுப்பு கால கட்டத்தில் பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தும் விதமாக நாளை முதல் 31.07.2026 வரை பொது மக்கள் அதிகமாகக் கூடும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கணினி வாயிலாக கணக்கெடுப்பு செய்ய சுய கணக்கெடுப்பு வசதி மையங்களை மாவட்ட நிருவாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு எழும் அனைத்து சந்தேகங்களையும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர்கள், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் மற்றும் லப்பைகுடிக்காடு, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர்களின் அலுவலகங்களை அணுகிடலாம்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் ஜூலை 17 முதல் ஜூலை 31 முடிய தங்களது சுயவிவரங்களை அலைபேசி/ கணினி வாயிலாக பதிவு செய்து கொள்ளுமாறும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்குகொள்ளுமாறும் கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்

kaalaimalar2@gmail.com |
9003770497