Perambalur: MLA Sivakumar inaugurated the e-service center!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் மதரஸா சாலையில், சட்ட மன்ற அலுவலகம் அருகில் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இ – சேவை மையம் தேர்தலை முன்னிட்டு மூடப்பட்டது. அது, தற்போது புதுப்பிக்கப்பட்டு அதனை இன்று சட்ட மன்ற உறுப்பினர் கி.சிவக்குமார் இன்று மதியம் திறந்து வைத்தார். பெரம்பலூர் தாசில்தார் பழநி குமரன், மின்னணு மாவட்ட மேலாளர் கவிதா உள்ளிட்ட தவெக நகர செயலாளர் வில்லு விஜய் உள்ளிட்ட மாவட்ட, மாநில, ஒன்றிய, பேரூர், கிளைகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இ-சேவை மையத்தில் சிறு குறு விவசாயி சான்றிதழ், ஓய்வூதியதிட்டம், விதவை சான்று, சாதிசான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வருவாய்த் துறையின் சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் திருமண நிதியுதவி திட்டம், இணைய வழி பட்டா மாறுதல், முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ்கள், கலப்புத்திருமண சான்றிதழ்கள், சொத்து மதிப்பு சான்றிதழ்கள், 2 பெண் குழந்தைகளுக்கான சான்றிதழ்கள் உள்பட அனைத்து திட்டங்களுக்கும் இணையவழி சான்றுகளை பெறலாம்.என தெரிவிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!