பெரம்பலூர் : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் நான்கு ரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நேற்று நடத்தினர்.
வட்ட தலைவர் ரெ.இராஜகுமாரன் தலைமை வகித்தார். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், புதிதாக தொடங்கப்பட்ட அலுவலகங்களுக்கு பகுதி நேர ஊழியர்கள் பதவியை அனுமதித்து காலியிடங்களை நிரப்புவதோடு 2 மணிநேர பதவியை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
வாரிய உத்தரவின் படி கணக்கிட்டு அலுவலர்களுக்கு தனி அறை, கணினி, போலி ரூபாய் நோட்டு கண்டு பிடிக்கும் இயந்திரம் ஆகியவை வழங்கவேண்டும்.
பல்வேறு லஞ்ச புகாருக்கு உள்ளாகிய பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் மாணிக்கத்தை இடமாற்றம் செய்து பொது விசாரணை செய்ய வேண்டும் மற்றும் பெரம்பலூர் கோட்ட நிர்வாக சீர்கேட்டை காலதாமதமின்றி களைய வேண்டும்.
அரியலூர் கோட்டத்தில் காலதாமதமின்றி சம்பள சீட்டு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.
மாh;க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின், பொருளாளர் கே.கண்ணன், கோட்ட செயலாளர், எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் விளக்க உரையாற்றினர். மற்றும் டி.பாபு, என்.வேல்முருகன், எ.மலரவன், எஸ்.ரஜினிகாந்த், ஆர்.கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.