Perambalur: Electricity Board requests to operate electric motors during the day time!

பெரம்பலூர் மாவட்டம் உள்பட பல இடங்களில் தற்போது தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் சூரிய ஒளி, காற்று மூலம் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நிலக்கரியை எரித்து கிடைக்கும் அனல் மின்சாரத்தால் மாசு உண்டாகிறது. ஆனால், இயற்கை ஆற்றல் வளங்களான சூரிய ஒளி, காற்றில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தால் அதிக அளவில் மாசு ஏற்படுவதில்லை. எனவே, அனைத்து விவசாயிகளும் முடிந்தவரை மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்தி மின்சார சிக்கனம் மற்றும் மாசு ஏற்பாட்டை தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மின்வாரியத்தின் பெரம்பலூர் அசோக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!